முதலாவது பெண் பதிவாளர் நாயகம் – திருகோணமலையின் பெருமை

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த சசிதேவி ஜலதீபன் – வரலாற்று சாதனை

இலங்கை நிர்வாக சேவையில் வரலாற்று சிறப்புமிக்க புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) அதி விசேட தரமுடைய அதிகாரியான திருமதி சசிதேவி ஜலதீபன், நாட்டின் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது அதிகாரப்பூர்வ கடமைகளை நேற்று (25) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர், திருமதி சசிதேவி ஜலதீபன் திருகோணமலை மாவட்டச் செயலாளராகவும், பல்வேறு அரச நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளிலும் சேவையாற்றி வந்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் பெண்களின் பங்கிற்கு இது முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

அதிகார வரலாற்றில் பெண்களுக்கு திறந்திடும் வாய்ப்புகளுக்கும், எதிர்கால தலைமுறைகளுக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *