திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே கடலில் 60 கிமீ தொலைவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது; சுனாமி அபாயம் இல்லை

இன்று பிற்பகல் வேளையில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கே கடலில் 60 கிலோமீட்டர் தொலைவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் சம்பவத்தை GSMB & DMC புவிச்சரிதவியல் திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மையம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் அறிவித்ததாவது, நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை எனவும், பொதுமக்கள் அச்சமின்றி இயல்பான வாழ்க்கையை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *